Monday, February 2, 2009

காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!
கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...


காதலர் பேசும் மொழி பூக்களுக்கு தெரியும்!!
பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...


ஜ...ஜ...ஜ....ஜம்மு....பே...பே...பே....பேபி!!
ஜம்மு பேபி!!

மிகப்பெரிய உயிரளவீட்டுத் (Biometric) தகவல்தளம் தயாராகிறது!


அமெரிக்கப் புலனாய்வுத்துறை (FBI) மிகப்பெரிய அளவில் உயிரளவீட்டுத் (Biometric) தகவல்ளைத் தயாரிக்க முயற்சி எடுத்து செயலிலும் இறங்கியிருக்கிறது. அது ஒரு தனிப்பட்ட மனிதனின் வெவ்வேறு பண்புகளையும் விலாவாரியாகக் கொண்டிருக்கும் எனத்தெரிகிறது. உலகளாவிய இந்தத் தகவல் சேகரிப்பு பல நாடுகளின் சட்ட ஒழுங்கு அமைப்புக்களுக்கு உதவும் எனத்தெரிகிறது.
ஒவ்வொருவரின் முக மின்னணுப் பதிப்புக்கள், கைரேகைகள், முகத் அமைப்பு, முகத்திலுள்ள கீறல்கள், கண்ணின் கருவிழி பதிவுகள், அவர்கள் எப்படி நடக்கிறார்கள் மேலும் அவர்களின் இயல்பான செயல்பாடுகள் முதலான தகவல்கள் அதில் இடம்பெறும். இதை வைத்து பெருகிவரும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரை உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து கட்டுக்குள் கொண்டுவரலாம் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன! மேலும் பல சூடான செய்திகளைப் படிக்க இங்கே செல்லுங்கள்: வாஷிங்டன் போஸ்ட்


செவ்வாய்க்குச் சனிபிடிக்குமா?

2008 ஜனவரி மாதத்தின் இறுதியில் செவ்வாய்க் கிரகத்தை ஒரு எரிகல் தாக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

அது கடந்த 1908ல் சைபீரியாவைத் தாக்கிய அளவே இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சைபீரியாவைத்தாக்கிய கல் மூன்று மெகா டன் வெடிமருந்துகளை ஒன்றாக வெடிக்கச் செய்த பாதிப்பை உண்டாக்கியிருந்தது. பத்து மில்லியன் மரங்களை அது கபளீகரம் செய்தது.

எப்படியோ, வியாழனுக்கும் இப்படி ஒரு விளைவு நிகழ்ந்த போது அது தாங்கிக்கொண்டது. செவ்வாய்க் கிரகத்தைவிட அது அளவில் மிகப்பெரியது. ஆனால் இதுபோன்ற விளைவைச் செவ்வாய் எப்படித் தாங்கிக் கொள்ளப்போகிறது என்றுதான் தெரியவில்லை.

செவ்வாய்க்கிரகத்துக்கு எப்படியோ சனி பிடிக்கப்போகிறது என்று தெரிகிறது.

யாஹூவை விலைபேசியாச்சு!

Yahoo-Microsoft

இணைய வல்லவனாக ஒருகாலத்தில் முதன்மையானவனாகத் திகழ்ந்த யாஹூ வை மென்பொருள் வல்லவன் மைக்ரோசாஃப்ட் விலை பேசியுள்ளது! அதன் விலையில் ஒன்பது மடங்கு அதிகமாகத் தந்து (44.6 பில்லியன் டாலர்) அந்த நிறுவனத்தை வாங்கிக்கொள்ள அறிவிப்பு செய்துள்ளது. அதற்கான காரணமும் உண்டு. யாஹுவையும் எம்.எஸ்.என்.ஐயும் இணைப்பதன் மூலமும் கூகுளையும் மிஞ்சிவிடலாம் என்ற கணக்கில் மைக்ரோசாஃப்ட் யோசிக்கிறது. மைக்ரோசாஃப்ட்டின் 2009க்கான முன்னோட்ட வருமானத்தின் 21 மடங்கை கூகுள் இப்போதே சம்பாதித்துக் கொண்டுள்ளது. யாஹூ மற்றும் எம்.எஸ்.என். இணைப்பு மூலம் 23 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டமுடியும் அதனால் இந்த அதிகவிலை பரவாயில்லை என்று சொல்கிறது மைக்ரோசாஃப்ட். கொஞ்சம் அதிகம்தான். ஏன் என்றால் மின்னஞ்சல் சேவை தவிர சொல்லிக்கொள்ள அதில் ஒன்றுமில்லை! அதுவும் யாஹூவின் மின்னஞ்சல் சேவை வர வர மாமியாள் கதைதான் இதற்குப்போய் இவ்வளவு காசா என்று யோசித்தால் அதில் மிஞ்சுவது காலகாலமாய் இருக்கும் யாஹூவின் வாடிக்கையாளர்கள்தான் மதிப்பு மிகுந்தவர்கள் என்பது விளங்கும். வேறென்ன இதில் சொல்ல!


உருளைக்கிழங்கு இணைய சர்வர்

உருளைக் கிழங்கிலிருந்து மின்சாரம்தயாரித்து அதில் ஒரு உள்ளமைக்கப்பட்ட (Embedded) இணைய சர்வரைச் செயல்படுத்தியிருக்கிறார்கள். PIC16F876 எனும் நுண் சில்லை (Microchip)க் கொண்டு 76.8 கிலோ ஹெட்ஸில், 1.5 வோல்ட் மின்சாரத்தில் இயங்கக் கூடிய (0.00002 வாட்கள்) இணைய சர்வர் இது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திலும் தன் நிலையை மறுபதிப்பு (Refresh) செய்யக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கு இணைய சர்வர்
இதில் உருளைக் கிழங்கு மின்கலன்களை எப்போதெல்லாம் மாற்றவேண்டும் என்றும் கணித்திருக்கிறார்கள்…




முந்துகிறது மைக்ரோசாஃப்ட்!

கொஞ்சம் கொஞ்சமாக கூகுளை எல்லாவிதத்திலும் முந்துகிறது மைக்ரோசாஃப்ட். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை! லைவ் மெயில் வெளியானதும் மைக்ரோசாஃப்டின் இணைய ஆதிக்கம் மேலும் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். மிகவிரைவில் 4 மற்றும் 5 வது இடங்களிலிருந்து 2ம் இடத்துக்கு முன்னேற எல்லா நிலையிலும் தகுதி பெற்றுவிட்டது மைக்ரோசாஃப்ட்.

தற்சமயம் வந்த தகவலின்படி லைவ் சேர்ச் (http://search.live.com) புதுப்பிக்கப் பட்டு விட்டதால் கூகுளைவிட பல மடங்கு வேகமாகச் செயல்படுகிறது என்று தெரிகிறது.

கூகுளில் பணியாற்றிவந்த முக்கிய பெருந்தலைகள் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறி வேறு நிறுவனங்களை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

எர்த்மைன் படமாக்கும் வாகனம்

கூகுள் புவிவரைபடங்களைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. மிகப்பெரிய கலைக்களஞ்சியத் தளங்கள், புவியியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகியவை புவிவரைபடங்களைத் தனியாக உருவாக்க முடியாமல்/உருவாக்காமல் கூகுளின் வரைபடத்தைத் தான் பயன்படுத்திக் கொள்கின்றன. இவற்றில் முக்கியமானதாகக் கூறப்படுவது விக்கிமேப்பியா (www.wikimapia.org) என்ற கட்டற்ற(Open Source) கலைக்களஞ்சியம் ஆகும். அந்தளவுக்கு கூகுளின் வரைபடங்கள் பிரபலம். மேலும் முப்பரிமாண வீதி வரைபடங்களையும் வெளியிட்டு மிகப் பிரபலமாகத் திகழ்ந்து வருகிறது கூகுள்.

2006ம் ஆண்டு உருவாக்கப்பட்டு தற்போது டெக்-கிரஞ்ச் விருது பெற்றுள்ள ஒரு நிறுவனம் பற்றி உங்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீதிகள் உள்ளிட்ட முப்பரிமாண உண்மை வரைபடங்களை மனிதர்கள் வீதிகளில் நடந்தால் பார்க்கும் கோணத்திலேயே உருவாக்கும் நோக்கத்தில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அடுக்கு அடுக்காக அசைபடக் கருவிகளைக் கொண்டு வாகனங்களை முக்கிய வீதிகளில் வலம்வர வைத்து அதன் மூலம் நேரடிக் காட்சிகளைப் படமாக்கி அவற்றில் தேவையான செய்திகளை ஏற்றி, பார்ப்பவர்களுக்கு தாமே அவ்விடங்களுக்குச் சென்று வலம்வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தி அவர்கள் திரும்பும் வீதிகளைக் காட்டி ஆச்சரியத்தில் மூழ்கடிக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த ஏற்பாட்டை உண்மையைக் கிரமப்படுத்துதல்(Indexing reality) என்று அழைக்கிறார்கள் இவர்கள்.வாகனத்தின் பக்கத்தோற்றம்

தற்போது சோதனைக்காக இந்த ஒருங்கிணைப்பு வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சமே துல்லியமான அளவீடுகள் மற்றும் பயனரின் தேவைக்கேற்ற மாற்றங்களை உள்ளடக்கிக் கொள்ளும் தன்மை என கூறப்படுகிறது. கட்டடக் கட்டமைப்பு, நகர வசதி மேம்பாடு, சுகாதாரம், ஆயுட்காப்பீடு, அவசர சேவைகள், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் பலதுறைகளில் சாதனை படைக்க இருக்கும் இந்த மாதிரியான பயன்பாட்டு தொழில்நுட்பத்தை நாம் இனிவரும் காலங்களில் தவிர்க்க இயலாது என்பது அப்பட்டமான உண்மை.

www.earthmine.com என்ற தளத்தில் சென்று இதுபற்றி முழுமையாகக் காணுங்கள்.

புதிய முயற்சிகள்! புதிய கண்டுபிடிப்புகள்!!!

புதிய கண்டுபிடிப்பு இல்லாத உலகம், உலகமே இல்லை। கீழே சில புதிய கண்டுபிடிப்புகளின் (ஒரு சில எசகுபிசகு) அணிவகுப்பு கண்டு ரசித்துவிட்டு பின்னுட்டமிடுங்கள்

அதுவும் கணினி உபயோகிப்பாளர்களுக்கு மிகத்தேவையான கண்டுபிடிப்பு கடைசிப்படமாக உள்ளது.





























தம்பிலுவிலு’ஐ பிரப்பிடமாகவும் சுன்னாகத்தை புகுந்த இடமாகவும் கொண்ட ஹர்ஷன் (தம்பிலு) தனது பிறந்ததினதை கொஸ்டல்’இல் தனது கல் கம்பிலு’உடனும் தனது அன்பு காதலி’உடன் தொலைபேசி’இலும் மிகவும் உட்சாகதுடன் கொண்டடினதக தகவல்கள் தெருவிக்கென்ரன,